டிராக்டரில் வீதி உலா வந்த திரவுபதியம்மன்

Update: 2024-05-12 05:21 GMT

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அண்ணன்மார் தங்காத்தாள் கோயிலில் படுகள திருவிழா நடைபெற்றது. கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்த திருவிழாவானது, கோயில் புனரமைப்பு பணிகளுக்கு பின் நடைபெற்றது. இந்த படுகள பெருவிழாவில் காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேங்கடபுரத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் வைபவத்தை கண்டு களித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள பழமை வாய்ந்த மகேஸ்வரி அம்மன் கோயிலில், பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், கூடைகளில் பூக்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர், அந்த பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரவுபதியம்மன் டிராக்டரில் வீதி உலா வந்தார். இந்த டிராக்டரை பக்தர்கள் சிலர் அலகு குத்தி இழுத்து வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்