திருப்பத்தூர் அருகே சாதிய மோதல் அபாயம்.. துணைபோகும் MLA...அதிர்ச்சி பின்னணி

Update: 2024-09-03 08:43 GMT

திருப்பத்தூர் அருகே பட்டியலினத்தவருக்கு கடை வாடகைக்கு விட எதிர்ப்பு தெரிவிப்பதால், ஜாதிய பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் ஜான் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான இடத்தை அவருடைய மகன் மற்றும் மகள்கள் பராமரித்து வருகின்றனர். அந்த இடத்தில் 4 பேர் கடை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் நிலையில், உஷா என்பவர் ஆவின் பால் கடை வைப்பதற்காக மூர்த்தியின் மகள் ஷீலாவிடம் முன்பணம் கொடுத்துள்ளார்.

இதையறிந்த மற்ற கடைக்காரர்கள் உஷா கடை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், செல்வகுமார் என்பவர், அந்த இடமே தனக்குச் சொந்தமானது என்று கூறி பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஜான் மூர்த்தியின் இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள், ஆலாங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உஷா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், மற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களுக்கு திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி துணைபோவதாகவும் கூறியுள்ளார். இதனால், அங்கு ஜாதிய மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்