பூட்டிய கதவை உடைத்து வீட்டையே சுத்தம் செய்த கொள்ளையன் - சுற்றுலா சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 20 லட்சம் ரூபாய் மற்றும் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவலப்பள்ளி சாலையில் வசித்து வரும் தில்லை கோவிந்தராஜ், குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது, அவரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 12 சவரன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் அட்கோ போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.