போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் தனவந்தன். ஆன்லைன் டிரேடிங்கில் ஆர்வம் கொண்ட இவர், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனாளியானதாக கூறப்படுகிறது. இதில், தன் தந்தையிடமே சுமார் 15 லட்சம் கடன் பெற்று தனவந்தன் நஷ்டமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை ஆன்லைன் டிரேடிங்கில் இழந்ததால், மன உளைச்சலில் இருந்த தனவந்தன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு முன் இரண்டு முறை இதேபோல் இளைஞர் தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.