கம்புடன் சென்றவரை... கவ்வி குதறிய சிறுத்தை... நூலிழையில் தப்பியவர்.. சொன்ன உறைய வைக்கும் பேட்டி...

Update: 2024-08-24 13:19 GMT

தேனி மாவட்டம் கம்பத்தில் வன காப்பாளரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

கோம்பை ரோடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரைத் தாக்க சிறுத்தை ஒன்று பாய்ந்துள்ளது...

நூலிலையில் ஈஸ்வரன் உயிர் தப்பி உள்ளார்.

நாய்கள் குரைத்ததால் அங்கிருந்து சிறுத்தை தப்பி ஓடி மற்றொரு புதருக்குள் ஒளிந்து கொண்டது...

வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் ஈஸ்வரன் கூறிய பகுதியில் சிறுத்தை உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தேடி சென்றபோது அங்கு ஒளிந்திருந்த சிறுத்தை திடீரென வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்பவரை தாக்கி விட்டுத் தப்பி ஓடியது...

இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

அந்தப் பகுதியை சுற்றிலும் தற்போது வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்