ஈரோடு அருகே, ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளையனை போலீசார்கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சின்னத்தம்பிபாளையம்
ஊராட்சி மன்ற தலைவராக சுமதி தவசியப்பன் என்பவர் பதவி வகித்து வருகிறார். கடந்த ஜுன் மாதம் சுமதியின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், திருப்பூரை சேர்ந்த வினோத்குமார் என்பவரை கைது செய்தனர்.