திருப்பத்தூரில், வடமாநில தொழிலாளியின் ஜூஸ் கடையில் பொருட்களை அடித்து உடைத்த நபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூரில் சாலையோரம் உள்ள ஜூஸ் கடையில், சிவராஜ் பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் என்ற நபர் ஃபலூடா கேட்டுள்ளார். அதற்கு அந்த வடமாநில தொழிலாளி, ஏற்கனவே ஒரு தடவை ஃபலூடா வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிட்டீர்கள்... முதலில் பணம் கொடுங்கள்... பிறகு ஃபலூடா தருகிறேன் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரேம்குமார், வடமாநில தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.