துடிதுடித்த குரங்குக்கு உயிர் கொடுத்த இளைஞர்.."ஊரில் நல்ல பெயர் கிடைச்சி இருக்கு"
வேலூரில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய குரங்கிற்கு வாயோடு வாய் வைத்து மூச்சு தந்து உயிர் கொடுத்த இளைஞரை ஊர் மக்களும் நண்பர்களும் பாராட்டு மழையில் நனைத்தனர். கோட்டைச் சேரியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடிய குரங்கின் உயிரை கூலித் தொழிலாளியான நிதிஷ்குமார் காப்பாற்றினார். அவருக்கு வனத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டிய நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு ஊரில் இதற்கு முன்பு இருந்ததை விட நல்ல பெயர் கிடைத்துள்ளதாக பூரித்தார்.