குழந்தையின் முதுகில் பிரம்பால் தாக்குதல்..முதுகில் ரத்த தடயம்.. வலியால் துடிக்கும் குழந்தை

Update: 2024-01-25 14:18 GMT

வேலூரில் ஒன்றரை வயது குழந்தையை, அங்கன்வாடி ஊழியர் பிரம்பால் தாக்கியதாக கூறி குழந்தையின் பெற்றோர் சுமத்திய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சுஜாதா என்பவர், தன் ஒன்றரை வயது மகளை, வீட்டிற்கு அருகேயுள்ள அரசு அங்கன்வாடியில் விட்டபொழுது இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. குழந்தையின் முதுகில் பிரம்பால் தாக்கிய தடயங்களை கண்டு திடுக்கிட்ட பெற்றோர், வலியால் துடித்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீசில் புகாரளிக்க உள்ளதாக கூறி ஆதங்கத்தை கொட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்