திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு, விடுதி வசதி இல்லாததே காரணம் என சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த அனாரியன் என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி
முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வரும் போது, பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் கல்லூரியில் விடுதி வசதி இல்லாததாலேயே, மாணவன் வெளியே அறை எடுத்து தங்கியதாகவும், இதுவும் விபத்துக்கு காரணம் எனவும் சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து, பேட்டியளித்த உயிரிழந்த மாணவனின் தந்தை நல்லதம்பி, தெருவிளக்கு இல்லாததே தனது மகனின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.