அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு... போலீசில் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் செய்த தந்திரம்

Update: 2023-09-22 04:18 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ராதாவிளாகம் கிராமத்தில் உள்ள மாரியம்மன், சிவன் உள்ளிட்ட 3 கோயில்களில் மர்மநபர்கள் 4 பவுன் தாலி செயின் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலியை திருடினர். பின்னர், அருகில் உள்ள சிவன் பார்வதி கோவிலுக்கு சென்ற மர்மநபர்கள் 2 பவுன் தாலிச் செயினையும் திருடிச் சென்றுள்ளனர். சிவன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து கிள்ளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்