ரோட்டிலேயே அநியாயமாக உயிரை விட்ட மகன்... ஆத்மாவை அழைக்க தந்தை செய்த மாந்திரீகம்...
ஓசூரில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா சாந்தியடைந்து, வீட்டுக்கு வேண்டி தந்தை மற்றும் குடும்பத்தினர், விபத்து நடந்த இடத்தில் பூஜை செய்து வழிபட்டனர்.
ஓசூர் ஜூஜூவாடி மாருதி நகரைச் சேர்ந்த துரைராஜ், விஜயலட்சுமி தம்பதியின் மகன் ராஜசேகர், தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30-ஆம் தேதி இரவு, ஓசூர் சிப்காட் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தெருநாய் மீது வாகனம் ஏறி நிலை தடுமாறி, எதிரே வந்த மினி பஸ் மீது மோதினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், ராஜசேகரின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர், விபத்து நடந்த இடத்திற்கு சென்று, ராஜசேகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், ஆத்மா சாலைகளில் சுற்றித்திரியாமல் வீட்டுக்கு வர வேண்டியும் பூஜை செய்தனர். இதன் மூலம் உயிரிழந்த தனது மகன் ஆத்மாவாக தங்கள் வீட்டிற்கு வருவான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.