அடிபம்போடு போடப்பட்ட சாலை - "இதுக்கு ஒரு எண்டே இல்லையா.." காண்ட்ராக்டரின் லட்சணம்.. ஊரே சிரிக்குது

Update: 2023-10-11 04:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் அருகே அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட சிமெண்ட் சாலையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட நூக்காம்பாடியில் இருந்து மாதலம்பாடி பகுதி வரை, பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சுமார் 3 கோடியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது .இந்த பணிகளை மேற்கொண்ட தனியார் ஒப்பந்ததாரர், நூக்காம்பாடி பகுதியில் சாலையில் அமைந்துள்ள அடிபம்பை அகற்றாமல், சுமார் 2 அடி உயரத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உரிய கலவை முறைகளை கடைபிடிக்காமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்....

Tags:    

மேலும் செய்திகள்