விடுதலை செய்தும் போக மறுத்து இரவு வரை அமர்ந்ததால் போலீசார் அதிர்ச்சி

Update: 2023-11-03 07:00 GMT

செய்யாறு அருகே சிப்காட்டுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா உள்ளிட்ட ஒன்பது கிராமங்களில் சிப்காட் விரிவாக்க பணிக்கு 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். தொடர்ந்து 124 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று சார் ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக வந்தனர். செய்யாறு பேருந்து நிலையம் அருகே வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை ஆறு முப்பது மணி அளவில் நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தால் தான் புறப்படுவோம் என கூறி இரவு 9 மணி வரை மண்டபத்துக்கு உள்ளேயே இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நேரில் வந்த சார் ஆட்சியர் அனாமிகா, போராட்டக்காரர்களிடம் மனுவை பெற்றதுடன், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்