பின்னால் பார்க்காமல் சைடு வந்த முதியவர்..அடுத்த நொடி தலைக்கு அருகே..வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

Update: 2023-12-13 04:20 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. பின்னால் பேருந்து வருவதை அறியாமல், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது, பேருந்து மோதியது. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயசுந்தரன் காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்