சென்னை புழல் அருகே பைக்கிற்குள்பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை, 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர். வினாயகபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் மழையால் சேதம் அடைந்த பைக்குகள் பழுது பார்க்கப்பட்டு உள்ளன. அப்போது, ஒரு பைக்கில் நல்ல பாம்பு, பதுங்கி இருந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பைக்கிற்குள் நல்ல பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.