மரண விளிம்பில் போராடிய தாய்-சேய்..காக்கும் கடவுளாய் வந்த மீட்பு படையினர் நெகிழ்ச்சி சம்பவம்..

Update: 2023-12-15 15:09 GMT

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் சிக்கிய தன்னையும், பிறந்து 20 நாட்களே ஆன தனது குழந்தையையும் காப்பாற்றிய மீட்பு படையினருக்கு, இளம் பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவை சென்னை மாநகராட்சி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த ரேவதி என்பவர், 20 நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து விட்டு, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கனமழையால் கொரட்டூரில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார். தாய், சேய்யை படகு மூலம் மீட்ட மீட்பு படை, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். இதற்கு நன்றி தெரிவித்து ரேவசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்