திடீரென தடுக்கி கீழே விழுந்து மயங்கிய MLA - அடுத்த நொடியில் அமைச்சர் செய்த செயல்
தரவரிசை பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது மருத்துவமனை வளாகத்திலேயே படியில் தடுக்கி கீழே விழுந்து லேசான மயக்கமடைந்தார். இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோர் அவரை இருக்கையில் அமர வைத்து ஆற்றுப்படுத்தினர். பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது சட்டமன்ற உறுப்பினர் மோகன் நலமுடன் உள்ளார்.