"சென்னையை உலுக்கி எடுத்த மிக்ஜாம்"தள்ளிப்போன பார்முலா-4 கார் பந்தயம்..எப்போது தெரியுமா..? | Chennai

Update: 2023-12-06 11:14 GMT

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10ம் தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர தெரு பந்தயமாக ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தடை கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, வரும் 9,10ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயம், மிக்ஜாம் புயல் பாதிப்புகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 15, 16-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்