தொடர் மழையால், சென்னையை அடுத்துள்ள பீர்க்கங்கரணை ஏரி நிரம்பி குடியிருப்பிற்குள் தண்ணீர் புகுந்தது. 61-வது வார்டு பகுதிகளில் மழை நீர் இடுப்பு அளவுக்கு தேங்கி வீடுகளுக்கு உட்புகுந்துள்ளதால், மக்கள் கை குழந்தையுடன் அவதியடைந்தனர்.
கழிவுநீருடன் மழை நீரும் வீடுகளுக்குள் உள்ளதால் நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் போன்ற உபாதைகளும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.