யானையை சுட்டுக் கொன்ற விவகாரம்... வனத்துறை உயர் அதிகாரிகள் அதிரடி | Krishnagiri
ஓரூர் அருகே ஜவளகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்து கிடைந்தது. இதனை பரிசோதித்த வனத்துறையினர் குண்டு பாய்ந்து உயிரிழந்ததை அறிந்தனர். தந்தங்கள் அப்படியே இருந்ததால், வேட்டைக்காக கொல்லப்படவில்லை என தெரியவந்தது. தொடர்ந்து முத்து மல்கேஷ் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்த நிலையில், அவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்டதாக ஜவளகிரி வனச்சரகர் முரளிதரனை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்