நாடாளுமன்றத்தை நடுங்க வைத்த சம்பவம்..பாஸ் வாங்கியது எப்படி..?அடுத்தடுத்து அவிழும் ட்விஸ்ட்

Update: 2023-12-14 02:36 GMT

நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர், பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவை 3 மாதங்களாக நச்சரித்து பாஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோரஞ்சன் மைசூருவை சேர்ந்தவர் என்பதால், பாஜக எம்பி அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த‌தாகவும், நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட கோரி, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த‌தாகவும் கூறப்படுகிறது. சாகர் ஷர்மாவை தனது நண்பர் எனக்கூறி மனோரஞ்சன் அறிமுகம் செய்து, பார்வையாளர் பாஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்