அருள் ஆறுமுகத்தின் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை அரசு ரத்து செய்ததை ஏற்று, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுவதை எதிர்த்து போராடிய அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பின்னர் அருள் ஆறுமுகம் தவிர்த்து 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற்ற நிலையில், அருளின் மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கடந்த 4-ம் தேதி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்.