சென்னையில் களமிறங்கிய ராட்சசன்..அதுவும் பூமிக்கடியில் செய்யப்போகும் சம்பவம்..எதற்காக தெரியுமா ?

Update: 2023-09-02 03:44 GMT

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில்118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. (vogfx in 2 )இந்நிலையில்,

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி 4-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்ட 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. (vogfx in 3 )இந்த வழித்தடத்தில், பிளமிங்கோ என பெயர் வைக்கப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில், பணியை தொடங்கி உள்ளது. (vogfx in 4 )கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வழியாக திருமயிலை வரை சுரங்கம் தோண்டப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் திருமயிலை வந்தடையும். (vogfx in 5 )

இந்த நவீன சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் மெரினாவில் பொருத்தப்பட்டு தற்போது சோதனைகளும் நிறைவு பெற்று சுரங்கம் தோண்ட தொடங்கியுள்ளது. (vogfx in 6 ) 700 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த இயந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட ஏதுவாக இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்