வீட்டை சூறையாடிய வெள்ள நீர்..ஒரு ஜான் வயித்துக்காக..3 கி.மீ மூச்சுமுட்ட நடந்த சோகம்
எழில் நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 400குடும்பங்கள் வசித்து வருகின்றனர்... நாவலூரை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி மிக் ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது... மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... மழை நீர் வடியாமல் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த நிலையில், 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது... வெள்ளம் மெல்ல மெல்ல வெளியேறும் சூழலில் கழுத்தளவு இருந்த நீர் தற்போது முழங்காலளவு குறைந்துள்ளது... பால் உள்ளிட்ட எவ்வித அத்தியாவசிய பொருட்களும் அங்கு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... மழை வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டு பலியானதாய் மக்கள் குமுறுகின்றனர். அத்தியாவசிய உணவுக்காக மழை நீரில் 3 கிலோ மீட்டர் தூரம் சிலர் நாவலூருக்கு நடந்தே சென்று வரும் சூழல் நிலவி வருகிறது... வீடுகளில் இருந்த உடைமைகள் அனைத்தும் வீணாகி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.