பிறந்த நாளே இறந்த நாளான சோகம்... ரயில் முன் பாய்ந்த இளைஞர்... குடியாத்தம் அருகே அதிர்ச்சி...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர் ஒருவர் தனது பிறந்த நாளன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டும் குடுயாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் சாகர். 23 வயது இளைஞரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கூடநகரத்திற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று தனக்கு பிறந்தாள் என்பதால், நண்பர்களுடன் இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சாகர், திடீரென ஆலந்தூர் ரயில் நிலையல் அருமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தற்கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.