கரூர், காருடாம்பாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி பழனியம்மாள் என்பவர், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, உயிரிழந்த மூதாட்டி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் எனக் கூறி, சிலர் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் சடலத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சமாதான நிலை ஏற்பட்டு மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.