குறுக்கே புகுந்த கார்..! - கணவன் கண் முன்னே மனைவி கடத்தல்... கணநேரத்தில் மாயமான கும்பல்

Update: 2023-11-24 06:41 GMT

ஓசூரை அடுத்த கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவர் மகள் திரிஷா, ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் அலசப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு திரிஷா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் திரிஷாவை, மூர்க்கபள்ளம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிய த்ரிஷா, தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து திரிஷாவை அசோக் கண்முன்னே காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஓசூர் அட்கோ போலீசார், கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்,

Tags:    

மேலும் செய்திகள்