மகளை கடத்திய காதலன்... இளைஞரின் வீட்டை அடித்து உடைத்த குடும்பம்... திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மகளை காதலித்து கடத்தி சென்றதாக கூறி இளைஞரின் வீட்டை பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். சசி என்பவரது மகள் சோபனா சுரேஷ் என்பவரை, காதலித்து வந்ததாகவும் இதனை பெண்ணின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சோபனா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், சோபனாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 20 - க்கும் மேற்பட்டோர் கோவிந்தாபுரத்தில் உள்ள சுரேஷின் வீட்டை அடித்து நொறுக்கினர். இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் சுரேஷின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.