ஹாஸ்பிட்டல் செல்லும் வழியிலே பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர்

Update: 2023-09-30 15:20 GMT

போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் அருகே போக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி-மணிமேகலை தம்பதியருக்கு, ஏற்கனவே நிவாசினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மணிமேகலைக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக்குழந்தைக்கு

பாளேத்தோட்டம் கிராமப்புற செவிலியர் மீனாட்சி என்பவர் தடுப்பூசி செலுத்தினார். குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது. குழந்தைக்கு செலுத்திய தடுப்பூசி மருந்து காலாவதியாகவிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை பலியானதா? அல்லது பெண் சிசுக் கொலையா? என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்