ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அருந்ததியினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதாக, எஸ்எடி பிரிவு உள்ளிட்ட 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சீமான் தரப்பு வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனை காரணமாக சீமான் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.