வேதனையோடு புலம்பி தவித்த பெண்கள்.. உறுதி கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவி | Thanthitv

Update: 2024-08-16 08:51 GMT

புதுப்பட்டினம் ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவி காயத்ரி தனபால் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூடத்திற்கு வந்திருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் 14, தங்களுக்கு மாத ஊதியம் சரியாக வருவதில்லை என்று ஊராட்சி தலைவியிடம் வேதனையுடன் முறையிட்டு, மனு கொடுத்தனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் நிலையில், அந்த குழுவின் தலைவி சங்கீதா, சம்பளத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக அவர்கள் முறையிட்டனர்.

எனவே, மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியை மாற்ற வேண்டும் என்றும், மாத ஊதியத்தை ஊராட்சி மன்றத் தலைவரே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பி, விரைவில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று ஊராட்சி தலைவர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்