வயநாடு நிலச்சரிவால் கண்ணீர் சிந்திய குடும்பம்.. கரம் நீட்டிய அதிமுக | Wayanad landslides | ADMK

Update: 2024-08-12 02:30 GMT

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாண்குமார், ஷியாபுதீன் ஆகிய 3 பேர் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், அதிமுக சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்