வெளுத்து வாங்கிய கனமழை - வீடுகளில் புகுந்த வெள்ள நீர் - பரிதவிக்கும் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பேருந்து நிலையம் ,ரயில்வே பீட்டர் சாலை ,காந்தி ரோடு , தாராபுரம் சாலைகளில் உள்ள கால்வாய்கள் அடைத்ததால் மழைநீர் செல்லமுடியாமல் சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடியது. தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.