பிரிந்து சென்ற மனைவிக்கு கொடுத்த தொல்லை.. மாமனார், மாமியாருக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-08-12 06:33 GMT

கோவை, பச்சாபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதுமிதா. இவர், பச்சாபாளையம் ரூபி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை இரு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில், திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் பிரிந்திருக்கின்றனர். இருவரின் விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில், மதுமிதாவின் வீட்டிற்கு சென்று பிரகாஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தன் தந்தையிடம் தெரிவித்த அவர், குடும்பத்துடன் சேர்ந்து போலீசில் புகாரளிக்க சென்றுள்ளார். இதில், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மாமனாரை வழிமறித்த பிரகாஷ், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தடுக்க வந்த ஆட்டோ ஓட்டுநரையும், மாமியாரையும் வெட்டியது பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது. படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்