லோன் வாங்கித் தருவதாக காட்டிய தில்லுமுல்லு.. கதறும் 35 பெண்கள் | Thanthitv
தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண் ஒருவர், 35 பெண்களிடம் சுமார் மூன்றரை லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலரிடம், லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மூன்றரை லட்ச ரூபாய் வரை வசூல் செய்தது மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டாக சேர்ந்து போலீசில் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.