சென்னையை நடுங்க வைத்த ராட்வீலர் நாய் - உரிமையாளர் மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு
சென்னையை நடுங்க வைத்த ராட்வீலர் நாய்கள்
உரிமையாளர் மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு
சென்னை, கொளத்தூரில் பள்ளி சிறுவனை ராட்வீலர் நாய் கடித்த விவகாரத்தில் நாய் உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஜெரால்டு என்ற சிறுவனை ராட்வீலர் நாய் காதில் கடித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், நாயின் உரிமையாளரான ஜான் பெட்ரிக்ஸ் மற்றும் மெர்ஸி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.