16 வயது மகன் மீது கல்லை போட்டு முகம் சிதைய சிதைய கொன்ற தந்தை - காரணத்தை கேட்டால் ஆத்திரம் வரும்

Update: 2024-06-15 03:17 GMT

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே 16 வயது மகனை கொலை செய்ததாக தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பென்னாகரம் அருகே, தாசம்பட்டி பகுதியில் முகம் சிதைந்த நிலையில், 16 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாளின் மகன் யாதவன் என்பது தெரியவந்தது. தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை பெருமாளை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மது போதையில் மகனை கொலை செய்ததை, பெருமாள் ஒப்புக்கொண்டார். தாசம்பட்டியில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக அதிகாலையில் மகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார் பெருமாள். அப்போது, சிறுவன் வர மறுத்து, இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் மகனை கல்லால் அடித்துள்ளார். மயங்கி விழுந்த மகனின் தலையில் கல்லைப் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்