பொங்கி வழியும் நீர் நிலைகள் - மகிழ்ச்சியில் விவசாயிகள்
அதன்படி, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு நீர் வரத்து உயர்ந்துள்ளது. சோத்துப்பாறை அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மஞ்சளார் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள வரதமாநதி நீர்தேக்கம் மழை காரணமாக நிரம்பியது. நீர்தேக்கத்தில் இருந்து ஆயக்குடியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.