திடீர் ரெய்டு...பிரியாணியை பார்த்ததும் சிக்கனில் தெரிந்த மாற்றம் ...அதிகாரி எடுத்த அதிரடி ஆக்சன்
அண்மையில் இந்த உணவகத்தில் உட்கொண்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றநிலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வின் போது கெட்டு போன பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவற்றை குப்பையில் கொட்டி அழித்தநிலையில், இந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் தகுந்த பயிற்சியின்றி உணவகங்களில் பணியாற்றி வருவதாகவும், மொழி தெரிந்த நபர்களை வேலைக்கு அமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.