தென்னிந்தியாவை அதிரவைத்த பயங்கரவாதி கைது - கைப்பற்றிய திடுக்கிடும் ஆவணங்கள் - கர்நாடகாவை பதறவைத்த

Update: 2024-05-16 14:42 GMT

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த முகமது ஜாகிர் உசைன், இலங்கை கொழும்புவில் பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்த்து வந்த அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் சேர்ந்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தையும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட விவகாரத்தில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் முக்கியமாக பார்க்கப்பட்ட ரஃபி என்கிற நூருதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் நூருதினுக்கு ஜாமீன் வழங்கியது. அதன் பின்பு ஜாமின் நிபந்தனை விதிப்படி விசாரணைக்கு உரிய முறையில் ஆஜராகாத காரணத்தினால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் நூருதீன் தலைமறைவான காரணத்தினால் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மைசூரில் உள்ள ராஜீவ் நகரில் நூருதினை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் இருந்த இடத்தில் குற்ற ஆவணங்கள் செல்போன்கள் லேப்டாப்கள் பென்டிரைவுகள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பாகிஸ்தான் நாட்டவரின் உத்தரவின் அடிப்படையில் தேச விரோத செயலில் ஈடுபடும் உளவு நடவடிக்கைகளுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக உயர்தர கள்ள நோட்டுகளை அச்சடித்து நிதி திரட்டியது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்