பிறந்தது வைகாசி! - ஈரோட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான - ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் கோலாகலமாக நடந்த
ஈரோட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எருமைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊர்காவலன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க புனித நீர் கலசங்கள் யாகசாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.