காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி, அவரது கணவர், மாமியார் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வரை பயணச் சீட்டு பெற்று வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கும் போது டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டை ஆய்வு செய்துள்ளனர். பைக்குள் இருந்த டிக்கெட்டைத் தேடி எடுப்பதற்குள் ஆய்வாளர்கள் அவர்களுக்குத் தலா 500 ரூபாய் அபராதம் விதித்த நிலையில் பையில் இருந்த பயண சீட்டு கிடைத்தவுடன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றதும் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.