வங்கி பக்கமே வராத ஏழை குடும்பத்துக்கு - பெரிய இடியை இறக்கிய Bank நிர்வாகம் -"எங்ககிட்ட தங்கமே இல்லை"

Update: 2024-05-14 14:34 GMT

சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் என்பவருக்கு,

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், போலியான நகைகளை கொடுத்து 23 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் பெற்றதாகவும், அந்த பணத்தை உடனடியாக திரும்ப கட்ட வேண்டும் என கூறி இருந்தது. அதிர்ச்சியடைந்த செல்வம் குடும்பத்தினர், வங்கிக்கு நேரடியாக சென்று, அலுவலர்களிடம் நோட்டீஸ் குறித்து விளக்கம் கேட்டனர். 23 லட்சம் நகைக்கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறும் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். வங்கி பக்கமே வராத தங்கள் குடும்பத்தாருக்கு எப்படி? இது போன்ற முன்னறிவிப்பு நோட்டீஸ், வந்தது என கேள்வி எழுப்பினர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தங்களிடம், தங்க நகையே கிடையாது என்று கூறிய அவர்கள், இதில் காவல்துறை தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை நடத்தி தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்