தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பங்கு சந்தை.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பங்கு சந்தை.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,
இன்று 553 புள்ளிகள் குறைந்து, 79 ஆயிரத்து
389ஆக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், மொத்தம் 4 ஆயிரத்து 910 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில்
இருந்து வெளியேறி, சீனப் பங்கு சந்தைக்கு முதலீடுகளை
மாற்றி வருவதால், இந்திய பங்கு சந்தை தொடர் வீழ்ச்சியை
எதிர் கொண்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய
முதலீட்டாளர்கள் மொத்தம் 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.