பள்ளி வாகனத்தை மறித்த அரசியல் நிர்வாகி - குழந்தைகள் முன் `அந்த வார்த்தை' - வெளியான வீடியோ

Update: 2024-07-21 13:01 GMT

சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்தை மறித்து தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறி திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... கல்லேரிப்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்தது.... அவ்வழியே செல்லக் கூடாது எனக்கூறி வாகனத்தை வழிமறித்த திமுக நிர்வாகி ராஜேந்திரன் வாகனத்தில் குழந்தைகள் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்... படிக்கும் பிள்ளைகளுக்கு முன்னால் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசி தவறான முன்னுதாரணமாகத் திகழும் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆத்தூர் கோட்டாட்சியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்