பள்ளியில் இருந்த புத்தகங்கள், ஆவணங்களை எரித்த விவகாரம்.. வெளியான புதிய அப்டேட்

Update: 2024-11-04 11:47 GMT

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, தீபாவளி விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அங்கு இரண்டு வகுப்பறையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் நோட்டு புத்தகங்கள், பள்ளி ஆவணங்கள், நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், மானூர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் பட்டாசுகள் வெடித்த போது அதன் தீப்பிழம்பு பள்ளிக்குள் சென்றதில் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு அறைகளிலும் புத்தகங்கள் எரிந்துள்ளதால் திட்டமிட்ட இது போன்ற செயலில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்