பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு | Thanthitv
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மே 17ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு அவகாசம் கோரியது. இதையேற்று 2 வாரம் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.