விஷ சாராயம் குடித்த கணவன் -காப்பாற்ற சொல்லிகாலில் விழுந்து கதறும் மனைவி -கண்கலங்க வைக்கும் காட்சிகள்
கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மாக்வானா தலைமையிலான குழுவினர், கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது, பெரியசாமி என்பவரின் மனைவி கவிதா, சாராயம் குடித்த தனது கணவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், எட்டு நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், தனது கணவரை மீட்டு தரக் கோரி, ஆணையக் குழுவினரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.