நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்த உடன் துடித்து பிரிந்த உயிர்? பள்ளியில் நடந்த பெரும் சோகம்
பொம்மையாபுரத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முத்து என்பவரது மகன் மகேந்திரன், சிவஞானபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். பிற்பகலில் பள்ளி இடைவேளை நேரத்தில் சென்று விட்டு வரும்போது, மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டு உள்ளார். அதன் பின்னர் தண்ணீர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் மகேந்திரன் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவன் மகேந்திரன், நாவல் பழம் தின்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? வேறு ஏதும் காரணம் உள்ளதா? என உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.